Thursday, December 28, 2017

கல்வியும் காலமும்

                                  
அரிச்சுவடி கையில் வைத்து
ஆலமர விழுதடியில்
இனிமை தரும் குயில் ஓசையிலே
ஈசனையும் ஆசானையும் வணங்கி
உயிர் மொழியாம் வள்ளுவமும்
ஊழ் உண்மை போற்றும் சிலப்பதிகாரமும்
எட்டுத்தொகையும் பத்துப்பாடும்
ஏட்டுக் படிப்பெல்லாம்
ஐயா க்கள் காலமெல்லாம்
ஒப்பற்ற காலமன்றோ
ஓய்வு பெற்றன கல்வியும், காலமும்.

மாத்திரை


மாத்திரை

இயற்கையை
மனிதனை
விழுங்கும் மரணத்தை
தள்ளி போட
செயற்கையாய் மனிதன்
விழுங்குகிறான் மாத்திரையை...

நன்றிக் கடன்


எல்லாவற்றையும் இயற்கையாய்
படைத்த இறைவனுக்கு
செயற்கையில் பூமாலை

மருந்து

மருத்துவமனை சுவரொட்டியில்
எழுதியிருக்கும் வாசகம்
“உணவே மருந்து”...

கருவி

காதில் தற்காலிகமாக
பாட்டு கேட்கும் கருவி
நீடித்தால்...நிரந்தரமாக
காது கேட்கும் கருவி.

துயரம்

சிங்கள மீனவர்கள் வலையில்
தமிழக மீனவர்கள்.
சிங்க தமிழர்களை
சிட்டன நினைத்து சுடுகிறார்கள் ,
சிங்கள ராணுவத்தினர் .

சீண்டிப் பார்க்கும் சிங்கள அரசு,
தலையை சொரியும் தமிழக அரசு,
வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு,
மீனவர்கள் மீள வழி யாதோ?

மழை


காற்று பலமாய் வீச
மண் வாசனை மூக்கை துளைக்க
பறவைகள் தத்தம் இருப்பிடத்திற்கு ஓட
இடி தன் கைகளால் மத்தளம் போட
மின்னல் தன் கண்களால் சிமிட்ட
கிழக்கே சூரியன் தலை காட்ட
சிறுவர்கள் பேசிக்கொண்டனர்
கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணமாம்...

முயற்சி

                                  
முயன்றால் முடியாதது
எதுவுமில்லை,
முயலாமல் முடிந்தது
எதுவுமில்லை,
வாழ்கையில் வெல்ல தேவை
முயற்சி..
அதற்கு தேவை முறையான
பயிற்சி ...
இவை இருந்தால் வாழ்கையில்
நீ பெறுவாய் தேர்ச்சி .

அம்மா

அம்மா, நீ எங்கள்
கரம் பிடித்து,
புறம் வாழ்கையில்
சிரம் நிமிர்த்த வைத்து
சிகரம் தொட விதை..அனால்
அறத்திற்கு  புறம்பாக
இறை குடுத்து ஆளாக்கிய
இறைவன்னான உன்னை எங்கள் வீட்டில்
இருக்க இடம் தரவில்லை இப்பொது தான்
நினைகிறேன் தெய்வம் ஏன் கோவிலில்
இருக்கிறது என்று..

Tuesday, December 26, 2017

சூழ்நிலை அறிந்து போட்டியிடு

நம் அனைவருக்கும் தெரிந்த முயல் ஆமை கதையை மையமாக வைத்து இந்த கட்டுரையை பார்க்கலாம்.

1. ஆமையும் முயலும் போட்டிக்கு ஒத்து கொள்கின்றன. இரண்டும் ஓட ஆரம்பிக்கின்றன. ஆமையை விட அதிக தூரம் சென்று விட்ட முயல்,  ஆமை வர தாமதமாகும் என்று எண்ணி மர நிழலில் தூங்கி விடுகிறது. ஆமை முன்னேறி சென்று வென்று விடுகிறது.
நீதி: மித வேகம் மிக நன்று.

2. முயல் தான் அதீத நம்பிக்கை மற்றும் சோம்பேறி தனம் காரணமாக தான் தோற்றோம் என்பதை உணர்ந்து மறுபடி போட்டிக்கு அழைக்கிறது. ஆமையும் போட்டிக்கு ஒத்துக் கொள்ள மறுபடி ஓட்டம் ஆரம்பிக்கிறது. இந்த முறை ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகச் சென்று வெற்றி பெறுகிறது முயல்.
நீதி: வேகமும் நிதானமும் எப்போதும் வெல்கிறது.

3. இப்போது நடக்கும் போட்டி முறையில் எப்போதும் நான் முயலை தோற்கடிக்க முடியாது என ஆமை உணர்கிறது. வேறு ஒரு புதிய முறையில் யோசித்து முயலை போட்டிக்கு அழைக்கிறது. எப்போதும் போல் முயல் வேகமாக ஓடி வருகிறது ஆனால், சிறிது தூரம் கடந்ததும் ஒரு ஆறு வருகிறது அதில் நீந்தி சிறிது தூரம் சென்று வெற்றி அடைய வேண்டும். அதை எப்படி கடந்து செல்வது என எண்ணிக் கொண்டு இருக்கும் போது, ஆமை நீரில் குதித்து நீந்தி சென்று வெற்றியை அடைகிறது.

நீதி: உள் ஆளுமை திறன் அறிந்து அதற்கேற்ற முறையில் உங்களது போட்டியை மாற்றிக்கொள்ள வேண்டும்.

4. இப்போது முயலும் ஆமையும் நண்பர்களாக மாறி விடுகின்றன. இருவரும் இணைந்து செயல்பட தயாராகின்றன. இந்த முறை இருவரும்  ஓட தயாராகின்றன ஆனால் இந்த முறை ஒரே அணியாக. போட்டியை ஆரம்பித்ததும் முயல் ஆமையை ஆற்றை அடையும்  வரை சுமந்து சென்றது. பின் ஆற்றில் நீந்தி செல்கையில் ஆமை முயலை சுமந்து செல்கிறது. பின் இருவரும் இணைந்து வெற்றி கோட்டை அடைகின்றன.

நீதி: தனி தனியாக உத்வேகம் அடைதலும் உள் ஆளுமை திறன் அறிதலும் இருத்தல் நலமே. ஆனாலும் ஒரு அணியாக செயல்பட்டால் வளர்ச்சி பன் மடங்கு பெருகும். ஒரு சில வேளை உங்களால் சிறப்பாக செயல் பட முடியவில்லை எனில் அணியாக செயல்படும் பொழுது அதிலிருந்து ஒருவர் உங்கள் வேலையை பகிர முன் வருவர்.

அணியின் செயல்பாடு என்பது சூழ்நிலை தலைமை பண்பை பொறுத்து அமைவதே. குறிப்பிட்ட சூழ்நிலையில் உள் ஆளுமை பண்பை எவர் சரியாகச் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்தே தலைமை பொறுப்பு அமைய வேண்டும்.

மேற்கூறிய கதையில் முயல் மற்றும் ஆமை இரண்டுமே தான் தோல்வி அடைந்த பின் சோர்ந்து விடவில்லை.
இரண்டு சூழ்நிலையிலும் ஆமை கடினமாக தான் உழைத்தது ஆனால் அதன் வெற்றிக்கு காரணம் தன் செயல்பாட்டு முறையில் கொண்டு வந்த சிறிய மாற்றமே.

எதிரியை அறிந்து போட்டியிடாமல் சூழ்நிலையை அறிந்து போட்டியிட்டால் நாம் நமது செயல்பாட்டில் அதிகளவு முன்னேற்றம் அடைவோம்.

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா
தமிழாக்கம்: இ. முத்தழகன்.( அகரம் அழகன்)

Saturday, December 23, 2017

தமிழ்

தமிழ்

சில நூற்றாண்டு ஆங்கிலம்
பல நூற்றாண்டு தமிழை விழுங்குகிறது
அன்று அரசவையில் தமிழுக்கு சன்மானம்
இன்று பள்ளிகளில் தமிழுக்கு அபராதம்
அன்று புலவர்களுக்கு செம்மொழி மாநாடு
இன்று அரசியல்வாதிகளுக்காக மாநாடு
அன்று தமிழெனில்  அனைவருக்கும் கொண்டாட்டம்
இன்று தமிழில் பேச அனைவருக்கும் திண்டாட்டம்
அன்று ஒரு வானளவு உயர்ந்திருந்த தமிழ்
இன்று ஒரு சாணளவு சுருங்கி இருக்கிறது
தமிழின்பெருமை தழைத்தோங்க
அனைவரும் தமிழில் உரையாடுவோம்

ஈழக் குரல்

ஈழக் குரல்

இரத்தக் காட்டேரிகளின் ராஜ்ஜியம்
எங்களது சிங்கள தேசம்
செழிப்பாக இருந்த எங்களுக்கு
பிடித்தது சனி ,
ஆம்! போர் என்னும் சனி.

நகரங்கள்  நரகமாயின
வீடுகள் வெறுந் தரையாயின
தொழிற்சாலைகள் தொலைந்து போயின
தொல்லைகள் தொடர்ந்தன...
எங்களது மகிழ்ச்சியும் எங்களை விட்டு
சென்றது மயானத்திற்கு.

குண்டு மழை பெய்தது
மனிதர்கள் மடிந்தனர்
மயான குழிகள் நிரம்பின
பதுங்கு குழியில் பதுங்கினோம்.

பசியால் வாடினோம்
துக்கத்தில் தொலைந்தது
எங்கள் தூக்கம்.

என்ன பாவம் செய்தோம் தாயே...
ஈழத்தின் ஈனப் பிறவிகளா நாங்கள்
எங்களிக்ககும் ஒரு விடியல் வராதா?

விடியலும் வந்தது
எங்களுக்கு அல்ல போருக்கு...!

கொடுமையின் கொடுங்கோல்
ஆட்சி தொடர்ந்தது....
வழியெங்கும் கன்னி வெடிகள்
சிக்கினால் சின்னாபின்னம்.

ஆதரிக்க யாருமில்லை
அரை வயிற்று கஞ்சிக்கு அல்லல் பட்டோம்
அராஜகம் அளவு கடந்தன
ஆர்பரித்து கிளம்பினோம்
அடுத்த நாடுகளுக்கு அகதிகளாக
என்று முடியும் எங்கள்
வாழ்கை போராட்டம்...?

நம்பிக்கை

நம்பிக்கை
கார்டை காட்டி
கத்தையாய் எடுத்து வருபவனிடம்
திருவோட்டை காட்டினால்
ஒத்தையாய் ஒரு காசு விழும்
என்ற நம்பிக்கையோடு
Atm வாசலில் பிச்சைகாரன்...

நம் பாரதம்

நம் பாரதம்

வேற்றுமையாம் அதில் ஒற்றுமையாம்
என்றுரைத்திடுவார் நம் பாரதத்தார்,
அண்டை நாட்டிற்கும்
அடுத்த வீட்டிற்கும்
தண்ணீரும் பல நன்னீரும்
தர மறுத்திடுவார் அதை தடுத்திடுவார்,
ஏட்டினிலும் பல பாட்டினிலும்
ஜாதிகளும் பல மதவாதிகளும்
மதங்களும் அதில் பல இனங்களும்
அன்றென்பார் இனி நன்றென்பார்.
சிறார்க்கு,
ஜாதி உணர்ச்சிகளையும்
மத எழுச்சிகளையும்
ஊட்டிடுவார் பின் தினித்திடுவார்.
தீண்டாமை குற்றம் என ஏட்டினிலும்
தீண்டினால் குற்றம் என வீட்டினுலும்
இருந்திருக்கும் அதனின்
மனம் திகைத்திருக்கும்
மெல்ல வெறுத்திருக்கும்.

தேடல் மனிதன்

தேடல் மனிதன்

நிழலை தேடும் மனிதனுக்கு
மரத்தை நட
நேரமில்லை..

உணவை தேடும் மனிதனுக்கு
உழவனின் வறுமை
தெரிவதில்லை

பணத்தை தேடும் மனிதனுக்கு
பந்தத்தை பேண
மனமில்லை

அறிவை தேடும் மனிதனுக்கு
அகந்தையை அறுக்க
வழியில்லை

மதுவை தேடும் மனிதனுக்கு
மானுட அறிவுரைகள்
புரிவதில்லை

வெற்றியை தேடும் மனிதனுக்கு
இடையூறுகள் யாவும்
தடைகளில்லை.

உழவும் உலகும்

  உழவும் உலகும்

வானம் பார்த்த பூமி
வர்ணம் தீட்டும் மேகம்
வரப்பு வழி வாய்கால்
வயல்வெளி இது உணவின் வழி.

தன் பிம்பத்தை பார்த்து
இரசிக்கும் மனிதனாய்
தன் நிழல் பார்த்து-ரசித்து
சிலிர்க்கும் மரங்கள்
நீண்ட மரம் இது நீங்கா வரம்

புண்ணாக்கு போடுபவனை
புல்லறுத்து தருபவனை
தொழுது- உழுகும் பொழுது
புல்லரிக்கும் காளை
விவசாயம் இது விசுவாசம்

வற்றிருக்கும் தொண்டை
ஊற்றெடுக்கும் கிணறு
சுற்றிருக்கும் படிகள்
வட்டக் கிணறு இது வற்றாத கிணறு.

வயலெங்கும் சேறு
சேற்றில் வளரும் செந்தாமரையாய்
செழித்துவளரும் நாத்து
பச்சை கிணறு இது பசுமையின் உயிர்.

துள்ளி திரியும் கன்று
தூர நின்று ரசிக்கும் பசு
விளையாட்டு பருவம்...
பாச பிணைப்பு இது கடவுளின் படைப்பு

அன்றாடம் வளரும்
அருகாமையில் துளிரும்
விதைக்காமல் விசும்பும்
களைகள் இது மண்ணின் விதைகள்.

நெளியும் புழு
ஒளியும் பாம்பு
நகரும் நண்டு
உழவனின் தோழமை இது உயிர்களின் ஒற்றுமை.

உடம்பெல்லாம் சேறு
அறைவயிற்றுச் சோறு
வேர்வை உரமிட்டு
உயிர் வழி காக்க உடல் வலி மறந்து
தன்னிலம் இன்றி நன்னிலம் உழுது
உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தார்- இங்கே
உணவிட்டனும் உயிரிட்டவனும் கடவுளே
விமர்சனம் இது தான் நிதர்சனம்.

Saturday, December 16, 2017

"இயற்கை"

"இயற்கை"

அதிகாலை எழுச்சி
 ஆதவனின் புன்சிரிப்பு
 இயற்கையின் இப்பண்பு
 ஈகையின் மறுபிறப்பு
 உன்னத மலைகளும்
 ஊற்றெடுக்கும் ஆறுகளும்
 எத்திசை நோக்கினும்,அது
 ஏழாம் அதிசயமே
 ஐ-வகை நிலங்களும்
 ஒன்றாய் இணைந்திடுமே,இயற்கையின்
 ஓங்கு புகழ் பாடிடுமே

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...