உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான்.
“எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்”
🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும் சீர்குலைக்காதவாறு உறுதியாக இருப்பேன்.
🔮நான் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் மகிழ்ச்சி, செழிப்பு, உடல்நலம் பற்றி பேசுவேன்.
🔮 நான் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் அவர்களுக்குள் இருக்கும் சக்தியை உணரச் செய்வேன்.
🔮ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும் நல்லவற்றை மட்டும் பார்த்து எனது நம்பிக்கையை மெருகேற்றி கொள்வேன்.
🔮சிறந்ததை மட்டுமே எண்ணுவேன், சிறந்ததை மட்டுமே
செய்வேன்,சிறந்ததை மட்டுமே எதிர்பார்ப்பேன்.
🔮 மற்றவர்களின் சந்தோசத்தை எனது சந்தோசமாக எண்ணி பூரிப்படைவேன் .
🔮கடந்த கால தவறுகளை மறந்து, எதிர்காலத்தில் நான் அடையப் போகும் பெருமைகளை எண்ணி வீறுநடை போடுவேன்.
🔮 நான் எப்போதும் மகிழ்ச்சியை மட்டுமே எண்ணுவேன் மற்றும் நான் சந்திக்கும் ஒவ்வோர் உயிரிடமும் புன்சிரிப்பை காட்டுவேன்.
🔮 பிறரை குறை சொல்ல நேரமே இல்லாத வகையில் என்னை
மெருகேற்றி உயர்த்தி கொள்ள பெரும் நேரம் செலவிடுவேன்.
🔮 சோகத்தில் அமைதியாகவும், கோவத்தில் தன்மையாகவும், பயத்தில் உறுதியாகவும், தொல்லைகள் வரும் பொழுதும் மனம் முழுதும் மகிழ்ச்சியை பரவிட செய்வேன்.
🔮 என்னுடைய நலனில் முழு கவனம் செலுத்தி அதை சொல்லால்அல்லாமல் செயலால் இந்த உலகிற்கு பேரறிவிப்பு செய்திடுவேன்.
🔮என்னுடைய மனசாட்சியின் பால் நேர்மையாக இருப்பேன்,இதனால் இந்த பிரபஞ்சமே எனக்கு துணையாய் நிற்கும் .
ஆக்கம் - கிறிஸ்டின் டி லார்சன்
தமிழில் - முத்தழகன் இ
(இந்த கட்டளைகளை தினந்தினம் காலை பிரகடனம் செய்யுங்கள். மேலும் அறிந்து கொள்ள ரோண்டா ப்யர்னே எழுதிய "ரகசியம்" புத்தகத்தை வாசிக்கவும் )
❣️❣️❣️
“அன்பை பெற வேண்டுமா...
உங்களை அன்பால் மூழ்கடித்து கொள்ளுங்கள்,
நீங்கள் ஒரு காந்தமாக மாறும் வரை”
❣️❣️❣️