Sunday, December 9, 2018

"அழைக்கும் அலைகள்"

ஓ அலைகளே,
ஓயாத அலைகளே,
துளித் துளியாய்
மண்ணில் விழுந்தாலும்,
ஒன்றாய் சேர்ந்தால் தான்,
ஓயாமல் உழைத்தால் தான்
கரையை அடைய முடியும் என
மனிதனுக்கு உணர்த்த தான்
கரை வரை வந்து கைதட்டி
சொல்கிறாயோ...!

கவலைகளை மறக்க தான்,
அஸ்தியை கரைக்க தான்,
காதைலை வளர்க்க தான்,
கண்ணீரை துடைக்க தான்,
மகிழ்ச்சியை நிறைக்க தான்,
ஆயிரமாயிரம் கனவுகள்,
ஆயிரமாயிரம் மனிதர்கள்,
வருவோரை வாரி அணைத்து
அலை கொண்டும்,
வெண்மை நுரை கொண்டும்,
தாலாட்டும் தாயும் நீ தானா...!

ஆழி பேரலையாய்,
சீரிச் வந்து சினம் கொண்டு,
சுனாமி என்னும் பெரும் துயராய்
ஒரு நாழிகை நேரத்தில்
ஒரு கோடி உயிரை
பறித்துக் செல்வதும் நீயே,
பாய்மர படகினிலே
மீன் தேடி செல்லும்
கோடி மீனவனையும் வாழச்
செய்வதும் நீயே...!

இன்பமும் துன்பமும்
இணைந்தது தான் வாழ்வென்று
நொடிப்பொழுதும் உணர்த்திச்
செல்லத் தான் அலையாய் பிறந்து
நுறையாய் முடிகிறாயோ.



Wednesday, October 17, 2018

நவராத்திரி பண்டிகையும் அதன் சிறப்பம்சங்களும்

இதோ வந்து விட்டது அந்த பண்டிகை. தெருவெங்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. எங்கும் பூ மாலைகள் தோரணங்கள் தொங்க விடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தினம் மாலை அன்றும் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த ஒன்பது நாட்களும் கடவுளுக்கே பண்டிகை தினம் தான். ஆம் சரிதான் நவராத்திரி பண்டிகை வந்துவிட்டது.பெண் தெய்வங்களில் மிகவும் சக்தியான தெய்வம் என்று கூறப்படும் துர்க்கை அம்மனை வழிபடும் விதமாக கொண்டாடப்படும் திருநாள் தான் இந்த நவராத்திரி பண்டிகை.இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரால் கொண்டாடப்படும் இந்த விழாவைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் சிறிது இங்கே காண்போம்.

நவ என்றால் ஒன்பது 9 நாட்களில் 9 வடிவமாய் துர்க்கை அம்மன் அவதாரம் எடுத்ததால் இது நவராத்திரி எனப்படுகிறது.

வெவ்வேறு விதமாக கதைகள் கூறப்பட்டாலும். இந்த  பண்டிகை கொண்டாடப்படுவதின் சாராம்சம் ஒன்றுதான். தீமையை வெற்றி கொள்ளும் நன்மை. பல்வேறு கதைகள்  இருந்தாலும் இரண்டு கதைகள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றன. முதல் கதையானது இலங்கையின் மன்னனான இராவணன் மான் வேஷம் கொண்டு சீதையைத் தன் வசப்படுத்தி இலங்கைக்கு கடத்திச் சென்றான். சீதையை மீட்பதற்காக இலங்கைக்கு சென்ற ராமன் அங்கு ராவணனோடு ஒன்பது ஒன்பது நாட்கள் போரிடுகிறான். பத்தாவது நாளில் இறுதிப்போரில் பத்து தலைகளைக் கொண்ட ராமனை தனது அம்பை கொண்டு அவனை வீழ்த்தினார். ஒன்பது நாட்கள் முடிந்து பத்தாவது நாளில் இந்த திருவிழா ராவணனின் சகோதரர்களாகிய மேகதாது மற்றும் கும்பகர்ணனை வீழ்த்தியதோடு முடிவடைகிறது.
இதன் இரண்டாவது கதை  துர்க்கை அம்மனை பற்றியது இந்த கதை பெரும்பாலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சொல்லப்படும் கதை ஆகும். அதாவது துர்க்கை அம்மன் மகிஷாசுரனுடன் போரிட்டு தர்மத்தை நிலைநாட்டிய நாளையே துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த கதையானது தேவி மகாத்மியம் என்னும் நூலில் உள்ளது.

நமது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இது கொழு என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வண்ண பொம்மைகளைக் கொண்டு நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்காரம் செய்து மேஜையில் அடுக்கி வைப்பது வழக்கம்.நவராத்திரி அன்று ஒவ்வொரு மாலையும் வீட்டில் அருகில் இருப்பவர்கள் வந்து கூட்டாக பஜனைகள் செய்வார்கள். வழிபாடு  செய்து முடித்தவுடன் அவர்கள் அனைவருக்கும் சுண்டல் முதலிய நவதானியங்களை ஒவ்வொரு நாளும் கொடுப்பது வழக்கம்.இந்த திருநாட்களில் கோயில்களில் பரத நாட்டியம் மோகினி ஆட்டம் முதலியன நடைபெறும்.

கர்நாடக மாநிலத்தில் முக்கியமாக மைசூர் அரண்மனையில் இவ் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இந்த விழாவினை காண உலகம் முழுவதில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர். தசரா பண்டிகையை ஒட்டி அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்டது போல நவராத்திரி திருநாள் ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது பத்தாம் திருநாளில் கலைஞர்களால் ராமாயணம் நாடகம் நடத்தப்படுகிறது. பத்தாவது நாளில் ஆட்டம் பாட்டம் மகிழ்ச்சி என பத்தாவது நாள் சிறப்பாய் நிறைவடைகிறது.
அந்த ஒன்பது நாட்களும் துர்க்கையம்மன் எடுத்த அவதாரங்களுக்கும் ஒவ்வொரு கதை உண்டு.

முதல் நாள் சைல புத்ரி

முதல் நாள் பார்வதியின் அவதாரமாக துர்க்கையம்மன் பார்க்கப்படுகிறாள். இதில் பார்வதி சிவனின் வாகனமான நந்தியின் மேல் அமர்ந்து ஒரு கையில் திரிசூலமும், ஒரு கையில் தாமரையும் வைத்திருப்பதாய் புராணங்கள் சொல்கின்றன. இந்தச் விளக்குத் திரியை மகாகாளியின் நேரடி அவதாரமாகவும் பார்க்கின்றனர். இந்த நாளின் வண்ணம் சிவப்பு அதாவது செயலையும், கோபத்தையும் குறிப்பதால் இந்த நாள் அமைகிறது.

இரண்டாம் நாள் பிரம்மசாரிணி

இதிலும் துர்க்கை பார்வதியின் அவதாரம் எடுக்கிறாள். இதில் பார்வதி மனம் ஏதும் செய்யாமல் பிரம்மச்சாரியாக இருப்பதால் பிரம்மசாரிணி எனப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.இந்தத் திருநாளில் மோக்ஷம் கிடைக்கவும் அமைதியை நிலைநாட்டவும் வேண்டப்படுகிறது. இந்த அவதாரத்தில் அவள் வெறும் காலால் நடந்து, கைகளில் ஜப மாலையும், கமண்டலத்தையும் வைத்திருக்கிறாள். அது அமைதியையும் குறிப்பதாகும் இந்த நாளில் வண்ணம் மஞ்சள். அது அமைதியையும் சக்தியையும் கொடுக்கிறது.

மூன்றாம் நாள் சந்திரகாந்தா

இந்தத் திருநாளில் பார்வதி சிவனை மண முடிந்த திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். அந்த கோலத்தில் பார்வதியின் முகம் நிலவை விடவும் அழகாக அழகாய் தோன்றியதால் இந்த நாளுக்கு சந்திரகாந்தா என்று பெயர் வந்தது. இது அழகையும் வீரத்தையும் குறிக்கிறது.

நான்காம் நாள் குஷ்முந்தா

இந்த அவதாரத்தில் பார்வதிதேவியை சதுர்த்தியன்று வழிபடுவர். இந்தக் கோலத்தில் இவ்வுலகையே படைத்தது மாபெரும் சக்தியாக அவளை பாவிக்கின்றனர் . இந்த அவதாரத்தில் பார்வதி எட்டு கைகளோடு புலியின் மீது அமர்ந்து பவனி வருகிறாள் இந்த நாளில் வண்ணம் பச்சை.

ஐந்தாம் நாள் ஸ்கந்த மாதா

இந்த நாளில் பார்வதிதேவியை பஞ்சமி தினத்தில் வழிபடுவர்.  இந்த நாளில் தாயாக காட்சி தருவாள்.இந்த நாளின் மகிமையானது தான் பெற்ற பிள்ளை ஏதாவது ஒரு ஆபத்திலிருந்து பெற்ற தாயை எப்படி உருமாறுவதை வெளிக்கொணரும் இதமாய் அமைந்துள்ளது.கோபம் கொண்ட ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து நான்கு கைகளுடன் ஒரு கையில் குழந்தையை வைத்திருப்பதாய் இந்த நாளில் காட்சி தருவாள்.

ஆறாம் நாள் காத்தியாயினி

துர்க்கையின் அவதாரமாய் கார்த்திகாவை இந்த பூமியில் அவதரித்த நாள் இந்த நாள் ஆகும். இந்த கார்த்தி யாவை போரின் கடவுள் என்று அழைக்கின்றனர். துர்க்கையம்மன் எடுத்த அவதாரங்களில் இது மிகவும் உக்கிரமான அவதாரம் என்று புராணங்கள் கூறுகின்றன. நான்கு கைகளில் போர் ஆயுதங்களுடன் சிங்கத்தின் மீது வலம் வருபவர் அன்றைய தினம் காட்சி தருகிறார்.

ஏழாம் நாள் கல் ரத்ரி

சப்தமி திருநாளில் வழிபடும் தெய்வம் இந்த கல் ரத்ரி. இந்த அவதாரமும் உக்கிரமான அவதாரமாக பார்க்கப்படுகிறது.இந்த அவதாரத்தில் தனது அழகான தோற்றத்தை விடுத்து சும்ப நிசும்ப என்ற அரக்கர்களை கொன்று அவதாரம் இது. இந்த நாளில் நிறம் வெண்மை. இந்த நாளில்தான் துர்க்கையின் நிறம் கருப்பாக மாறியது.

எட்டாம் நாள் மஹா கௌரி

இந்தத் திருநாள் ஆனது அறிவுக் கூர்மைக்கும் அமைதிக்கும் உரித்தான நாளாக பார்க்கப்படுகிறது. சிவனைக் காண பல்வேறு காடுகளையும் கடந்து சிரமப்பட்டு கைலாயத்தை அடைந்த துர்க்கை அம்மனை சிவன் கங்கையின் நீர் கொண்டு அபிஷேகம் செய்தால் இந்தப் பெயர் பெற்றாள்.

ஒன்பதாவது நாள் சித்திதாத்ரி

ஒன்பது மற்றும் நிறைவான நாள் நவமி ஆகும். இந்தத் திருநாளில் துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் பூணுகிறாள்.தாமரை மலர் மீது அமர்ந்து காட்சி தரும் துர்க்கை எட்டு சித்திகளையும் தன்னுள் மடக்கியவாறு காட்சி தருகிறாள்.

Monday, October 1, 2018

"அழகியல் வாய்ப்பாடு"



கிழக்கின் வழி வருபவனாம்
உலகிற்கு ஒளி தருபவனாம்,
மனிதருக்கு முன் வந்தவனாம் - அந்த
ஆதவன் விழிக்க மறந்தாலும்,
அன்பின் வழி பிறந்தவனாம்,
அறத்தின் வழி நடப்பவனாம் - அழகனின்
ஒரு பொழுதும் விடியாது
உன் காந்தர்வ கண் காணாது.

வளியோடு வழிந்தோடும்
கருமேக கூட்டமும்,  
ஒலியோடு ஒளிகொண்டு 
அசைந்தாடும் உன் திருமேனி கண்டு,
மலைமீது மழையாக
மனமிரங்கி வந்திடுமே,
பாற்கடலும் பொங்கிடுமே.



வளைந்திருக்கும் வல்லினமாய்,
மெலிந்திருக்கும் மெல்லினமாய்,
உன் இடையினம்  தொடும் - என்
சுண்டு விரல் கண்டு - சிவக்கும்  
உன் மதி முகம் கண்டு,
நண்டினமும் கை கொட்டும்,
வண்டினமும் தேன் சொட்டும்.


கணினி திரை கண்டு,
கண்ணிப் போன  கண்ணுக்கு,
கன்னிப் பெண்ணாய்,
மயில் தோகை இரண்டெடுத்து,
குயில் பாவை குரலெடுத்து,
வாடல் கொண்ட என் மனதை,
பாடல் கொண்டு வருடியவள்.


அம்மாவாசை இரவொன்றில்,
யாருமற்ற வீதியோன்றில்,
தட்டுத் தடுமாறி, 
வந்திருந்த திசைமாறி
திக்கெட்டு தேடிய எனக்கு,
கடல் வழியே நெளிந்தோடும்,
உடல் வழியே அழகோடும், 
வான் மின்னும் வின்மீனும்
விழி கொண்டு கண்கொள்ளும்,
தேவதை பெண்ணவளாய்,
கார்த்திகை தீபம் ஏற்றி
என் வாழ்வின் ஒளி ஏற்றியவள்.


உலகத்தை நீ தேட - உன்னிடத்தே
உலகத்தை நான் தேட, 
பணியோடு நெருப்பு உறவாட,
சுழித்துச் செல்லும் ஆற்று நீராய்,
சுளித்துச் செல்லும் என் வாழ்வில்,
தொட்டுக் தடவிட ஆள் இன்றி
பட்டுக் கொண்டு நானிருக்க -  நீ
பற்றுக் கொண்டு நானியிருக்க,
உற்றுக் கொண்டு பார்க்கையில்
இன்றோடு நீ வந்து காலங்கள் 
ஆனது மூன்றாண்டு.


பூவிதழ் மேனி கண்டு, சொக்கிக்
கிடக்கும் வண்டினமாய் - உன்
உன் விழியோடு விழிகொண்டு
கடிகார முள்ளாய் சிக்கிக் கிடக்க,
கடந்திட்ட காலம்தனை கணக்கிட்டால்
எண்ணிக்கை பத்தாமல், எனை
எண்ணி - கை காட்டிச் சிரிக்கும்,
காத்திருத்தல் கொடுமை எனச்
காலமெல்லாம் எண்ணித் திரிந்தேன்
கண்ணி உன் வரவின் பின்னே,
காலத்தின் விலை மறந்தேன்.


பேருந்து பயணமொன்றில்,
இடுக்கான சீட்டொன்றில்,
உன்னில் முகம் பதித்து,
கவிபாடி களித்திருக்க,
சிவப்பு வண்ண விளக்கு துடிக்க,
மெல்லச் சினுங்கிய அவளை,
மெதுவாய் திறந்து பார்த்தேன்,
"பேட்டரி லோ" - சார்ஜ் செய்யவும்
எச்சரிக்கை என்றது.



















Wednesday, September 19, 2018

"நட்பென்பது யாதெனில்.."

அன்பை தருவது நட்பு,
அகந்தை அறுப்பது நட்பு,
ஆதரவு கொடுப்பது நட்பு,
ஆற்றாமை தவிர்ப்பது நட்பு,
இன்முகம் காட்டுவது நட்பு,
இழிநிலை பார்க்காது நட்பு,
ஈசனும் போற்றுவது நட்பு,
ஈடேற்றம் காணாதது நட்பு,
உரிமை கொடுப்பது நட்பு,
உத்தமம் பார்க்காது நட்பு,
ஊழ்வினையால் சேர்வது நட்பு,
ஊடலால் பிரியாதது நட்பு,
என்றும் இனியது நட்பு,
எண்ணிப் பார்க்காதது நட்பு,
ஏற்றம் கொடுப்பது நட்பு,
ஏமாற்றம் காணாதது நட்பு,
ஐம்பாலும் போற்றும் நட்பு,
ஐதீகம் பார்க்காதது நட்பு,
ஒன்றாய் இருப்பது நட்பு,
ஒருமுகம் தவிர்ப்பது நட்பு,
ஓவியமாவது நட்பு,
ஓதித் திரிவோம் உலகமெங்கும்,
ஒளவியாகும் நம் நட்பு...!

"நானும் நாணும்"

இரவில் மின்னும் நிலவு ஆதவனை கண்டதும் மறைவது நாணம்.

கருமேகம் சூழ்ந்ததும் கன நொடியில்
கண் சிமிட்டி செல்லும் மின்னல் நாணம்.

கொட்டும் மழையில் சிதிறிச் செல்லும் ஒற்றை நீர்குமிழ் நாணம்.

சுழன்றடிக்கும் காற்றின் திசையில் சுதி பார்த்து பறந்து செல்லும் பறவையின் இரட்டை சிறகு நாணம்.

வளைந்தோடும் வாய்க்கால் ஓரம், தெளிந்தோடும் நீரின் மேல், நெளிந்தாடும் ஒற்றை புல்லின் நுனியானது நாணம்.

"நானும் நாணும்" பின் நாம் ஆகும்.



"நகரத்தார் சிறப்பு"

குறிஞ்சி மலைதணில்,
சோர்ந்திருந்த முல்லைக்கு,
சார்ந்திருக்க தேர் ஈந்த
பாரி வேந்தன் ஆட்சி நடத்த..

பறம்பு மலைதனில்,
குன்றாத வளமுடன்,
குடவரை கோயிலில்,
குயிலமுத நாயகியுடன்,
கொடுங்குன்ற நாதர் வீற்றுக்க,
பாதாளம்,பூலோகம், மேலோகம் என
மூன்று லோகமும் முடிந்திருக்க,
 
சின்னமாய் புலி இருக்க,
தின்னமாய் ஆட்சி சிறக்க,
சோழ நாட்டு நகரமாம்,
சோலை வனமாம்,
காவிரி பூம்பட்டினத்தில்

காதறுந்த ஊசியும்
கடை வழியே வராது என்ற
பட்டினதாரின் வாரிசாய்,

நீதி தவறிய
மன்னனின்  ஊரை
கோவத் தீயில் எரித்த
கண்ணிகி மரபினராய்,

 காண்போர் வியக்க
 ‎கானியெங்கும் சிறக்க,
 ‎நடுநிலை தவறாது,
 ‎வாணிபம் செய்து,
 ‎நகரத்தார் எனும் பெயர் பெற்று,

மீன்களை கொடியில் இட்டு,
மீனாட்சியை நெஞ்சில் இட்டு,
வையகம் பாடும், வைகை ஓடும்
பாண்டிய நாட்டிணில் குடி பெயர்ந்து

குடிப் பட்டங்கள் பல பிரித்து,
பங்காளிகள் புடை சூழ,
படயல்கள் பல செய்து,
படைத்தவன் மனம் குளிர,
பரம்பரைகள் பல கடந்தும்,
பறைசாற்றும் பெருமைகள் இவை.

என்பிரான் மலையடியில்,
நம் பிள்ளைகள் இனம் சேர,
இறை மனம் சிறக்க,
திருமணம் நடக்க
மண்டபம் அமைத்து
மகுடம் சேர்த்தோம்.

சிறார்கள் சிறகடிக்க,
மாணவர்கள் மதி சிறக்க,
கல்வியில் கரை கடக்க,
கல்வி வளர்ச்சி குழு அமைத்தோம்.

அன்பின் பிறப்பிடமாய்,
ஆனந்தத்தின் சேர்விடமாய்,
இன்பத்தின் இருப்பிடமாய்,
ஈடில்லா இனக்கத்துடன்,
உறவினர்கள் ஒருசேர,
ஊற்றெடுக்கும் பாசத்தோடு,
எல்லைகள் பல கடந்து,
ஏனைய வேலைகள் புறந்தள்ளி,
ஐயன் அவனின் அருளோடு,
ஒருமிக்க இங்கே கூடி,
ஓராயிரம் கதைகள் பேசி,
 ஒளவியம் கொள்ளும் குடும்பத்தினர்    ஆனோம்..!




Monday, August 27, 2018

அண்ணனுக்கு அன்பு வாழ்த்துக்கள்

உருவம் பெறும் முன்னே,
உலகம் வரும் முன்னே,
உணர்வோடும் உயிரோடும்,
உறவாட உடன்பிறப்பாய்
என்றும்- ஒன்றானாய்.

அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழாய்,
அன்பு செய்யும் போது களிக்கவும்
அகந்தை செய்யும் போது கழிக்கவும்,
அன்பனாய், ஆசானாய்- இரண்டானாய்.

பிறந்த போது விரல் கொடுத்தாய்,
வளரும் போது கை கொடுத்தாய்,
விழும்போதெல்லாம் தோள் கொடுத்தாய்,
அக்காலம்,இக்காலம் எக்காலமும்
எனக்குதவி - மூன்றானாய்.

நல்லதுமாய் வல்லதுமாய் செய்லகள் செய்ய,
நாற்புறமும் அரணாய் நின்று,
எனைக்காத்து- நான்றானாய்.

நிமிரும் போது வேற்றுமையாய்,
குனியும் போது ஒற்றுமையாய்,
உணர்ந்(த்)திடும் கை விரல்களாய்
என்றும் - ஐந்தானாய்.

ஐந்தோடு ஐந்தானல் - பத்தாததாகும்,
ஐந்தோடு ஐந்தாக பெருக்கிட கேட்டேன்,
கால் நூற்றாண்டு கடந்தின்று
இருபத்தி -  ஆறானாய்.

எண்ணுவதெல்லாம் எழுத்தாகது,
பூப்பணவெல்லாம் பழமாகாது,
என ஏளனச்  சிரிப்பு சூழ்ந்துவர,
அழும் மெழுகும் எரிவதுண்டு,
எழுபதும் எழுவதுண்டு என எனை
நம்பிக்-கை கொடுத்தாய்,
ஒற்றை பிறப்பும் போதுமெனக்கு
பிறவிகள் - ஏழானாய்.

கலங்கி நின்றால் குட்டையும் கடல்தான்,
விழித்து எழுந்தால் கடலும் குட்டை தான்,
அன்பைக் காட்ட அறிவை புகட்ட
அண்ணனாக நீ இருந்தால்,
எட்டாத தூரமென்று எதுவுமில்லை
எழுச்சிமிகு பாட்டானாய்
எனக்கென்றும் -  எட்டானாய்.

அறிவிட்டு,அன்பிட்டு,
உணவிட்டு,உணர்விட்டு
உயிரிட்டு, உரமிட்டு,
படியெட்டு கடந்திட்டு
உடன் பிறப்பாய் - ஒன்பதானாய்.

பத்து விரல் எண்ணினாலும்,
பத்தாது உன் விலை சொல்ல,
பக்கத்தில் இருந்து பார்த்தவனாய்,
உன் வாழ்ககை பக்கத்தின் எழுத்தவனாய்,
என்றும் அழியாத மையாய்,
என்றும் விலகாத மையமாய்,
பத்தாத என் நெஞ்சினிலே
என்றென்றும் - பத்தானாய்.

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே...!


















Tuesday, August 14, 2018

இது "சு-தந்திரம்"


“இது சு–தந்திரம்”



உணவை படைக்கும் உழவனின் வீட்டில்
அடுத்த வேளை உலை வைக்க வழி இல்லை- எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

பட்டொளி வீசி பறந்து நிற்கும் தேசிய கொடியை நெய்த நெசவுத் தொழில் சாகக் கிடக்க - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

கோடிகளை கொள்ளை கொண்ட அரசியல் தலைவர்கள் சுதந்திரமாய் கோட்டையில் கொடி ஏத்துகையில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

படுகுழி பாதையில்,  உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் எம் பள்ளிக் குழந்தைகள் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

கழிவறை கூட இல்லாத அரசுப் பள்ளிகள், அரவணைக்க இயற்கை என்ற நிலையில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

பால் மணம் மாறாத பிஞ்சு பெண் குழந்தைகளுக்கு கூட இங்கே பாதுகாப்பு இல்லை எனும் போது - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

பணமிருந்தால் கொலை கூட குற்றமில்லை இந்த வஞ்சகர் பூமியில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

காலை விடிந்ததும் கவுருவக் கொலைகளை வரிசை படுத்தும் நாளிதழ்கள் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.


சுதந்திரத்தின் நோக்கத்தை தொலைத்து விட்ட நமக்கு எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினமன்று மட்டும் மலையென குவியும் வாழ்த்தெதற்கு.

  உயிரற்ற செல்லின் வழியே சொல்வதல்ல, உயிரிலுள்ள ஒவ்வொரு செல்லும் சொல்லிட வேண்டும் நாம் இந்தியரென.
 


"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...