Monday, October 1, 2018

"அழகியல் வாய்ப்பாடு"



கிழக்கின் வழி வருபவனாம்
உலகிற்கு ஒளி தருபவனாம்,
மனிதருக்கு முன் வந்தவனாம் - அந்த
ஆதவன் விழிக்க மறந்தாலும்,
அன்பின் வழி பிறந்தவனாம்,
அறத்தின் வழி நடப்பவனாம் - அழகனின்
ஒரு பொழுதும் விடியாது
உன் காந்தர்வ கண் காணாது.

வளியோடு வழிந்தோடும்
கருமேக கூட்டமும்,  
ஒலியோடு ஒளிகொண்டு 
அசைந்தாடும் உன் திருமேனி கண்டு,
மலைமீது மழையாக
மனமிரங்கி வந்திடுமே,
பாற்கடலும் பொங்கிடுமே.



வளைந்திருக்கும் வல்லினமாய்,
மெலிந்திருக்கும் மெல்லினமாய்,
உன் இடையினம்  தொடும் - என்
சுண்டு விரல் கண்டு - சிவக்கும்  
உன் மதி முகம் கண்டு,
நண்டினமும் கை கொட்டும்,
வண்டினமும் தேன் சொட்டும்.


கணினி திரை கண்டு,
கண்ணிப் போன  கண்ணுக்கு,
கன்னிப் பெண்ணாய்,
மயில் தோகை இரண்டெடுத்து,
குயில் பாவை குரலெடுத்து,
வாடல் கொண்ட என் மனதை,
பாடல் கொண்டு வருடியவள்.


அம்மாவாசை இரவொன்றில்,
யாருமற்ற வீதியோன்றில்,
தட்டுத் தடுமாறி, 
வந்திருந்த திசைமாறி
திக்கெட்டு தேடிய எனக்கு,
கடல் வழியே நெளிந்தோடும்,
உடல் வழியே அழகோடும், 
வான் மின்னும் வின்மீனும்
விழி கொண்டு கண்கொள்ளும்,
தேவதை பெண்ணவளாய்,
கார்த்திகை தீபம் ஏற்றி
என் வாழ்வின் ஒளி ஏற்றியவள்.


உலகத்தை நீ தேட - உன்னிடத்தே
உலகத்தை நான் தேட, 
பணியோடு நெருப்பு உறவாட,
சுழித்துச் செல்லும் ஆற்று நீராய்,
சுளித்துச் செல்லும் என் வாழ்வில்,
தொட்டுக் தடவிட ஆள் இன்றி
பட்டுக் கொண்டு நானிருக்க -  நீ
பற்றுக் கொண்டு நானியிருக்க,
உற்றுக் கொண்டு பார்க்கையில்
இன்றோடு நீ வந்து காலங்கள் 
ஆனது மூன்றாண்டு.


பூவிதழ் மேனி கண்டு, சொக்கிக்
கிடக்கும் வண்டினமாய் - உன்
உன் விழியோடு விழிகொண்டு
கடிகார முள்ளாய் சிக்கிக் கிடக்க,
கடந்திட்ட காலம்தனை கணக்கிட்டால்
எண்ணிக்கை பத்தாமல், எனை
எண்ணி - கை காட்டிச் சிரிக்கும்,
காத்திருத்தல் கொடுமை எனச்
காலமெல்லாம் எண்ணித் திரிந்தேன்
கண்ணி உன் வரவின் பின்னே,
காலத்தின் விலை மறந்தேன்.


பேருந்து பயணமொன்றில்,
இடுக்கான சீட்டொன்றில்,
உன்னில் முகம் பதித்து,
கவிபாடி களித்திருக்க,
சிவப்பு வண்ண விளக்கு துடிக்க,
மெல்லச் சினுங்கிய அவளை,
மெதுவாய் திறந்து பார்த்தேன்,
"பேட்டரி லோ" - சார்ஜ் செய்யவும்
எச்சரிக்கை என்றது.



















2 comments:

"வாழ்க்கையின் ரகசியம்"

 உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...