“இது சு–தந்திரம்”
உணவை படைக்கும் உழவனின் வீட்டில்
அடுத்த வேளை உலை வைக்க வழி இல்லை- எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
பட்டொளி வீசி பறந்து நிற்கும் தேசிய கொடியை நெய்த நெசவுத் தொழில் சாகக் கிடக்க - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
கோடிகளை கொள்ளை கொண்ட அரசியல் தலைவர்கள் சுதந்திரமாய் கோட்டையில் கொடி ஏத்துகையில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
படுகுழி பாதையில், உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் எம் பள்ளிக் குழந்தைகள் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
கழிவறை கூட இல்லாத அரசுப் பள்ளிகள், அரவணைக்க இயற்கை என்ற நிலையில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
பால் மணம் மாறாத பிஞ்சு பெண் குழந்தைகளுக்கு கூட இங்கே பாதுகாப்பு இல்லை எனும் போது - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
பணமிருந்தால் கொலை கூட குற்றமில்லை இந்த வஞ்சகர் பூமியில் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
காலை விடிந்ததும் கவுருவக் கொலைகளை வரிசை படுத்தும் நாளிதழ்கள் - எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
சுதந்திரத்தின் நோக்கத்தை தொலைத்து விட்ட நமக்கு எதற்கு வேண்டும் இந்த சுதந்திர தின விழா.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினமன்று மட்டும் மலையென குவியும் வாழ்த்தெதற்கு.
உயிரற்ற செல்லின் வழியே சொல்வதல்ல, உயிரிலுள்ள ஒவ்வொரு செல்லும் சொல்லிட வேண்டும் நாம் இந்தியரென.
Tuesday, August 14, 2018
இது "சு-தந்திரம்"
Subscribe to:
Post Comments (Atom)
"வாழ்க்கையின் ரகசியம்"
உங்கள் வாழ்கையை அடியோடு மாற்றப் போகும் மாபெரும் ரகசியம் 📖 இது தான். “எனக்கு நானே சத்தியம் செய்கிறேன்” 🔮எனது மன அமைதியை எந்த ஒரு சக்தியும்...
-
பொதுவாக எனக்கு கடன் கேட்கும் பழக்கம் இல்லை. ஆனால், காலத்தின் கட்டாயம் இன்று கடன் கேட்கப்போகிறேன்... உங்கள் அனைவரிடமும்!? ஆம், உங்கள் வாழ்வின...
-
வாழ்க்கைக்கான அர்த்தம் தேடிடும், அற்புத பயணத்தில், இன்று ஓர் புதிய அத்தியாயம் எழுத தொடங்கு, நேற்றும் இன்றும் வேறல்ல. அதே வானம், அதே வ...
ஆள துடிப்பவர்கள் மட்டும் விடுதலை பெற்று கொண்டார்கள்...
ReplyDeleteவாழ துடிப்பவர்களோ துடித்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஉண்மை ஒரு நாள் புலப்படும் சகோதரா...
ReplyDelete